Monday, September 5, 2011

மாமல்லன்: எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

மாமல்லன்: எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

பிரமிள் வருகிற காட்சிகளில் சிரித்து மாளவில்லை.

மிக அருமையான அக்கறையான எழுத்து.

//அவனைத் தவிர எவனைப்பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள் உள்ளூர இருந்தாலும் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏன் எழுத்தில் அதை வைப்பதில்லை என்று இப்போது புரிகிறதா?

குமாஸ்தாக்களாலேயே ஆனது ஒட்டுமொத்த உலகும்.//

உண்மைதான். கூடவே, எழுத்தில் 'விமர்சனம்' வைக்கையில், ஒவ்வொன்றின் வரையறை குறித்த ஐயப்பாடும் வந்து குழப்புகிறதே, என்ன செய்ய?

Monday, July 18, 2011

மாமல்லன்: பல்கலைக்கழகத்தில் பாடமாக...

மாமல்லன்: பல்கலைக்கழகத்தில் பாடமாக...

இன்னும் சற்று ஆழமாகத் தொடங்கியிருக்கலாம், மாமல்லன்:

ஆழ்ந்தமிழ்ந்து
வயிரமாய் ஒளிர்ந்தெழ
வாய்ப்புக்கொண்டிருந்த கரித்துண்டு
சுயம் எரித்துத்
தீயாய்க் கனன்றெழ
விதிக்கப்பட்டு,
நானே தழல் என்று திமிரிற்று.

Sunday, July 3, 2011

மாமல்லன்: மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்

மாமல்லன்: மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்

அந்தப் புத்தகத்தின் இந்தப் பகுதி, வாசித்த பின், என்னை நெடுநாள் உறங்கவிடாமற் படுத்தியது. ஒன்று, அவள் என் தமக்கையாக அல்லது தாயாக உருவகம் கொண்டாதினால். மற்ற்து, ஒடுங்கிய இடையோடும் அகன்ற அல்குலோடும் கூடிய எம் இனத்து மாமை நிறப் பெண்ணான அவள்தான் உலகிலேயே அழகி என்பதை நெரூதாவுக்கு முன்பே நான் அறிந்து வைத்திருந்ததினால். பிற்றையது, அவன் உலகின் தலைசிறந்த கவிஞனே ஆயினும் அவளோடு கலக்க முடியாமல் இடையெழும் அச் சுவர் இன்னதென்று கம்யூனிஸ்டான அவனிலும் சாதிச் சமூக ரணப்பாட்டின் எனக்கு அது தெளிந்ததினால்.

தவிர, அதே புத்தகத்தில், அவன் நேரு, காந்தி பற்றிச் சொல்லியிருக்கிற கருத்துகளும் என்னைத் தொந்தரவு படுத்தின, இதே போல் அவைகளும் உள்ளம் அறிந்த உண்மைகள் ஆகையால்.