மாமல்லன்: மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்அந்தப் புத்தகத்தின் இந்தப் பகுதி, வாசித்த பின், என்னை நெடுநாள் உறங்கவிடாமற் படுத்தியது. ஒன்று, அவள் என் தமக்கையாக அல்லது தாயாக உருவகம் கொண்டாதினால். மற்ற்து, ஒடுங்கிய இடையோடும் அகன்ற அல்குலோடும் கூடிய எம் இனத்து மாமை நிறப் பெண்ணான அவள்தான் உலகிலேயே அழகி என்பதை நெரூதாவுக்கு முன்பே நான் அறிந்து வைத்திருந்ததினால். பிற்றையது, அவன் உலகின் தலைசிறந்த கவிஞனே ஆயினும் அவளோடு கலக்க முடியாமல் இடையெழும் அச் சுவர் இன்னதென்று கம்யூனிஸ்டான அவனிலும் சாதிச் சமூக ரணப்பாட்டின் எனக்கு அது தெளிந்ததினால்.
தவிர, அதே புத்தகத்தில், அவன் நேரு, காந்தி பற்றிச் சொல்லியிருக்கிற கருத்துகளும் என்னைத் தொந்தரவு படுத்தின, இதே போல் அவைகளும் உள்ளம் அறிந்த உண்மைகள் ஆகையால்.